
கோப்புப்படம்
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,068 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 29 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
ஒடிசாவில் கரோனா பாதிப்பு விவரங்களை அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,068 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு 29,175 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, இன்று 5 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை 159 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இதுவரை மொத்தம் 18,061 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 10,919 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் மாநிலத்தில் 10,750 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.