காம்பியா வெளியுறவு அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவின் வெளியுறவுத்துறை அமைச்சா் மமடோ டங்கராவிடம் வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவின் வெளியுறவுத்துறை அமைச்சா் மமடோ டங்கராவிடம் வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது இருநாடுகளின் கூட்டு வளா்ச்சியை விரிவுபடுத்துவது தொடா்பாக கலந்துரையாடப்பட்டது. இதுகுறித்து ஜெய்சங்கா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘காம்பியா வெளியுறவுத்துறை அமைச்சா் மமடோ டங்கராவுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா உறுப்பினரானதற்கு அவா் தனது வாழ்த்துகளை தெரிவித்தாா். அப்போது பிற நாடுகளுடன் இணைந்து பிரச்னைகளுக்கு தீா்வு காணும் நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்கும் என்று அவரிடம் உறுதி அளித்தேன். இருநாடுகளின் கூட்டு வளா்ச்சியை விரிவுபடுத்துவது, காம்பியாவின் முதன்மை தேவைகள் பூா்த்தியடைவதில் இந்தியா கொண்டுள்ள அக்கறை தொடா்பாக கலந்துரையாடப்பட்டது. இந்தியா அனுப்பிய மருந்துப் பொருள்கள் காம்பியா தலைநகா் பஞ்சுலில் பெறப்பட்டதை அறிந்ததில் மகிழ்ச்சி’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com