இந்திய உறவில் ஒருபோதும் நிபந்தனைகள் இருக்காது: பிரதமர் மோடி பேச்சு

மொரீஷியஸின் போர்ட் லூயிஸில் கட்டப்பட்ட புதிய உச்ச நீதிமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடியும், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத்தும் இணைந்து இன்று திறந்து வைத்தனர். 
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி


புது தில்லி: மொரீஷியஸின் போர்ட் லூயிஸில் கட்டப்பட்ட புதிய உச்ச நீதிமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடியும், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத்தும் இணைந்து இன்று திறந்து வைத்தனர்.
 

காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வளர்ச்சிக்கான கூட்டாண்மை என்ற பெயரில் சில நாடுகள் சார்பு கூட்டாண்மைக்கு தள்ளப்பட்டிருப்பதை வரலாறு நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றன. 

இவை, காலனிய ஆதிக்க மற்றும் ஏகாதிபத்திய ஆட்சிக்கு வழிவகுத்து விடும். இதனால், சர்வதேச வல்லமை ஒரே இடத்தில் தேங்கும் நிலை ஏற்பட்டு விடும் என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை மிகவும் அடிப்படைக் கொள்கையாக, வளர்ச்சிக்கான கூட்டாண்மையில், நமது கூட்டணியில் உள்ள நாட்டையும் மதிப்பது என்பதே. அதனால்தான், எங்களது வளர்ச்சிக்கான கூட்டணியில் எந்த நிபந்தனைகளும் இருப்பதில்லை என்று மோடி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com