இந்தியாவில் கரோனா பாதிப்பு 16 லட்சத்தை நெருங்குகிறது: பலி 34,968-ஆக உயர்வு

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 52,123 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 லட்சத்து 83 ஆயிரத்து 792 ஆக அதிகரித்தது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 16 லட்சத்தை நெருங்குகிறது: பலி 34,968-ஆக உயர்வு

புது தில்லி: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 52,123 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 லட்சத்து 83 ஆயிரத்து 792 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 34,968 -ஆக அதிகரித்தது. 

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 52,123 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 775 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 34,968-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த நோய்த்தொற்றுக்காக 5,28,242 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10,20,582 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 4,00,651 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 14,463 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை மட்டும்  மேலும் புதிதாக 9,211 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 298 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  அதிகபட்சமாக ஆந்திரம் மாநிலத்தில் 10,093 பேருக்கும், மேற்குவங்கத்தில் 2,294 பேருக்கும் மற்றும் குஜராத்தில் 1,144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தொற்று பாதிப்பு இதுவரை 2,34,114 ஆகவும், தலைநகர் தில்லியில் 1,32,275 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஜூலை 29- ஆம் தேதி வரை 1,81,90,382 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று புதன்கிழமை மட்டும் 4,46,642 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பாதிப்பு:  15,83,792
பலி: 34,968
குணமடைந்தோர்:  10,20,582
சிகிச்சை பெற்று வருவோா்:  5,28,242 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com