மூன்றாவது முறையாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கு வீட்டுக்காவல்: மத்திய அரசு 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டது மெகபூபாவின் வீட்டுக்காவல்
மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டது மெகபூபாவின் வீட்டுக்காவல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370யை மத்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் பல முக்கியத் தலைவர்கள் பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, அவரது தந்தை பரூக் அப்துல்லா ஆகியோர் கடந்த வருடம் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டு கடந்த மார்ச் மாத இறுதியில் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல் கடந்த வருடம் ஆகஸ்ட் 5 தேதி முதல் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக்காவலில் உள்ளார் முகபூபா முப்தி. தற்போதைய கட்டத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதியுடன் முடிவடைகின்றன.

இந்நிலையில் மெகபூபாவின் வீட்டுக்காவலை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது 

பொது பாதுகாப்பு சட்டம் அல்லது பி.எஸ்.ஏ இன் கீழ், எந்தவொரு விசாரணையும் இல்லாமல் ஒரு நபரை பல முறை தடுத்து வைக்க முடியும். இந்நிலையில் மூன்றாவது முறையாக வீட்டுக்காவலில் அடைக்கப்படுகிறார் மெகபூபா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com