மருத்துவராக இருந்து காவலர் ஆனவரின் மனநல ஆலோசனை

மன அழுத்தம்.. பொதுவாகவே இதற்கு எப்போதும் குறையிருக்காது, கரோனா பொது முடக்கக் காலத்தில் கேரள மாநிலத்தில் பொது மக்களுக்கு மட்டுமல்லாமல் காவலர்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தைக் குறைக்க ஒருவரது யோசனை பேருதவ
மன அழுத்தம்: காவலர்களைக் காக்க உதவிய மருத்துவராக இருந்து காவலரானவரின் யோசனைகள்
மன அழுத்தம்: காவலர்களைக் காக்க உதவிய மருத்துவராக இருந்து காவலரானவரின் யோசனைகள்


கோழிக்கோடு: மன அழுத்தம்.. பொதுவாகவே இதற்கு எப்போதும் குறையிருக்காது, கரோனா பொது முடக்கக் காலத்தில் கேரள மாநிலத்தில் பொது மக்களுக்கு மட்டுமல்லாமல் காவலர்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தைக் குறைக்க ஒருவரது யோசனை பேருதவி புரிந்துள்ளது.

மருத்துவம் பயின்று கோழிக்கோடு ஊரகக் காவல்துறைத் தலைவராக  பணியாற்றி வரும் டாக்டர் ஏ. ஸ்ரீனிவாஸ் இதற்கு மிகச் சிறந்த நிவாரணம் அளித்தார்.

வீட்டில் இருந்து வெளியே தங்கி பணியாற்றும் காவலர்கள், தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கவும் அவர் உதவி செய்தார். அவர்களது மனநலனுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து நலமான வாழ்க்கையை வாழ பல யோசனைகளை முன் வைத்தார்.

நேரத்தை எவ்வாறு செலவிடுவது, எதைச் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது? என்பது குறித்து காவலர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களை கனிவோடு வெளியிட்டார்.

அதாவது,

  • காலையில் சீக்கிரமாக எழுவது
  • ஒரு மணி நேரம் உடற்பயிற்சி அல்லது யோகா செய்வது
  • குழந்தைகளுடன் விளையாடுவது
  • வீட்டில் துணைவியாருக்கு உதவி செய்வது
  • தனியாக இருக்கும் குடும்ப உறவுகளுடன் விடியோ காலில் பேசுவது
  • இரவில் எட்டு மணி நேரம் உறங்குவது
  • பிறந்ததினம், திருமண நாள்களை வீட்டிலேயே சிறிய அளவில் விருந்தினர்கள் யாரையும் அழைக்காமல் கொண்டாடுவது
  • படிப்பது, ஓவியம் வரைதல் என உங்களுக்கு மிகவும் விருப்பமான வேலைகளை செய்வது
  • கரோனாவுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்பது
  • பழைய நண்பர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசுதல்
  • செய்யாமல் விட்ட பல வேலைகளை செய்து முடிப்பது.. போன்றவற்றை செய்யலாம்.

இவை அனைத்தும் நிச்சயம் கரோனா காலத்தில்  ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்கிறார் ஸ்ரீனிவாஸ்.

பல காவலர்கள், தங்கள் குடும்பத்தின் நலன் கருதி, வீட்டில் இருந்து வெளியே தங்கியிருந்தனர். இதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. 

1995-2000 ஆவது ஆண்டில் மைசூரு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்த ஸ்ரீனிவாஸ், தனது 5 ஆண்டு கால மருத்துவக் கல்வி வீணாகாமல், தற்போது காவல்துறையில் பணியாற்றி வரும் தனக்கு பல வழக்கு விசாரணைகளின் போது உதவுவதை நினைத்து மகிழ்ச்சி அடைவேன். தற்போது, அதே மருத்துவம், என்னுடன் பணியாற்றுவோரின் நலனைக் காக்கவும் உதவுவதை நினைத்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது என்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com