ராஜஸ்தானில் மத வழிபாட்டுத் தலங்கள் திறப்பு எப்போது? : மாநில முதல்வர் அறிவிப்பு 

ராஜஸ்தான் மாநிலத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் என மாநில முதல்வர் அசோக் கெக்லாட் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெக்லாட்
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெக்லாட்

ராஜஸ்தான் மாநிலத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் என மாநில முதல்வர் அசோக் கெக்லாட் அறிவித்துள்ளார்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தையொட்டி பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத் தலங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ராஜஸ்தானில் வரும் செப்டம்பர் 1 முதல் அனைத்து மதவழிபாட்டுத் தலங்கள் பொதுமக்களின் வழிபாட்டிற்குத் திறந்துவிடப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெக்லாட் வியாழக்கிழமை அறிவித்தார்.

அதேவேளையில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் பிளாஸ்மா தெரபியை வழங்க அனுமதிக்கக் கோரி இந்திய மருத்துவக் கழகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜஸ்தானில் இதுவரை 38 ஆயிரத்து 514 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com