ரக்ஷா பந்தனே கொண்டாடாத உத்தரப் பிரதேச கிராமம்: அச்சுறுத்தும் காரணம் என்ன தெரியுமா?

சகோதரத்துவத்தின் சிறப்பை விளக்கும் ‘ரக்ஷா பந்தன்’ விழாவினை இந்தியா முழுமையும் கொண்டாடினாலும், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் மட்டும் அதிலிருந்து விலகி நிற்கிறது.
சகோதரத்துவத்தின் சிறப்பை விளக்கும் ‘ரக்ஷா பந்தன்’ விழாவினை இந்தியா முழுமையும் கொண்டாடினாலும், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் மட்டும் அதிலிருந்து விலகி நிற்கிறது.
சகோதரத்துவத்தின் சிறப்பை விளக்கும் ‘ரக்ஷா பந்தன்’ விழாவினை இந்தியா முழுமையும் கொண்டாடினாலும், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் மட்டும் அதிலிருந்து விலகி நிற்கிறது.

கோண்டா: சகோதரத்துவத்தின் சிறப்பை விளக்கும் ‘ரக்ஷா பந்தன்’ விழாவினை இந்தியா முழுமையும் கொண்டாடினாலும், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் மட்டும் அதிலிருந்து விலகி நிற்கிறது.

தங்களை தீமைகளில் இருந்து காக்கும் சகோதரர்களுக்காக சகோதரிகள் கையில் ‘ராக்கி’ என்னும் கயிறு கட்டிக் கொண்டாடும் பண்டிகையான ‘ரக்ஷா பந்தன்’ இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் மட்டும் இதிலிருந்து தள்ளி  நிற்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள துமாரியாதி வட்டத்தில் உள்ள சிறிய கிராமம் பிகாம்புர் ஜகத் புர்வா. இந்த கிராமத்தில் கடந்த 75 வருடங்களாக ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுவதில்லை. அதுமட்டும் அல்ல அந்த பெயரை உச்சரிக்கவும் கூட சிலர் தயங்குகின்றனர்.   அதைக் கொண்டாடினால் தங்களுக்கு கெட்டது நடக்கும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அக்கம் பக்கத்திலுள்ள சிறிய கிராமங்களில் கூட இதே நிலைதான் நீடிக்கிறது. இப்படியான ஒரு நம்பிக்கை அந்த ஊரில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர் மனதிலும் ஊறிக் கிடக்கின்றது.

அந்தக் கிராமத்தின் வயதான பெரியவர்களில் ஒருவரான சுர்யநாராயண் மிஸ்ரா இந்த நம்பிக்கை குறித்துக் கூறியதாவது:

கடந்த 1955-ஆம் வருடம், ரக்ஷா பந்தன் தினத்தன்று எங்கள் குடும்பத்தில் உள்ள இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டான். அதிலிருந்து அன்றைய தினத்தில் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்ட இங்குள்ள இளம்பெண்கள் அஞ்சுகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை சில பெண்களின் வற்புறுத்தலான வேண்டுகோளுக்கு இணங்க, சகோதரர்களின் கைகளில்  ராக்கி கட்ட முயன்ற போது, மீண்டும் ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்தது. அதிலிருந்து இங்கு யாரும் ராக்கி கட்டவோ அல்லது அந்த பண்டிகையின் பெயரை உச்சரிப்பதற்கோ துணிவதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com