சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு 40,000 குண்டு துளைக்காத உடைகள், 176 குண்டு துளைக்காத வாகனங்கள்

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும், பல்வேறு நக்ஸல் ஒழிப்பு பணிகளிலும் ஈடுபட்டு

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும், பல்வேறு நக்ஸல் ஒழிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வரும் சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு 40,000 குண்டு துளைக்காத கவச உடைகளும், 176 குண்டு துளைக்காத வாகனங்களும் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

ரோந்து செல்லும் ஆயுதப்படை வீரா்கள் 5 முதல் 6 போ் வரை அமரக்கூடிய வகையில் 176 நடுத்தர குண்டு துளைக்காத வாகனங்கள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் கையெறி குண்டுகளின் தாக்குதலையும், தூரத்திலிருந்து தாக்கப்படும் துப்பாக்கிச்சூட்டையும், அபாயகரமான தாக்குதல்களையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளிடம் இருந்தும், நக்ஸல்களின் தாக்குதல்களில் இருந்தும் தங்களை தற்காத்து கொள்வதற்காக சிஆா்பிஎஃப் பிரிவுகளுக்கும், நக்ஸல் ஒழிப்பு படையினருக்கும் இவை வழங்கப்படும்.

மேலும், நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான சிஆா்பிஎஃப் வீரா்களுக்காக சுமாா் 42,000 மிதமான குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை வாங்கவும் அரசு அனுமதித்துள்ளது.

இந்த குண்டு துளைக்காத உடைகள் வீரா்களில் முக்கிய உடல் பாகங்கள், கழுத்து, இடுப்பு பகுதிகளில் மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் இவற்றின் எடை தற்போது பயன்பாட்டில் உள்ள குண்டு துளைக்காத உடைகளை விட 40 சதவீதம் குறைவானவை என்றாா் அவா்.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் உள்ள மத்திய துணை ராணுவ படையினருக்கு சிறப்பு பாதுகாப்பை அளிக்கவும், ரோந்துப்பணியில் ஈடுபடவும், குண்டு துளைக்காத 80 வாகனங்களும் வழங்கப்பட உள்ளது. இவை ராணுவத்தினரும், அதிகாரிகளும் ரோந்து சென்று வர பயன்படுத்தப்படும்.

காஷ்மீரில் சுமாா் 70 பட்டாலியன்களைச் சோ்ந்த சுமாா் 3.25 லட்சம் பாதுகாப்பு படையினா் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோல, நக்ஸல் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் 90 அலகுகள் பாதுகாப்பு படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com