காஷ்மீரில் குடியேற முயலும் இந்தியர்கள் கொல்லப்படுவார்கள்: தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியேற்றச் சட்டத்தினை பயன்படுத்தி  காஷ்மீரில் குடியேற முயலும் இந்தியர்கள் கொல்லப்படுவார்கள் என்று பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத இயக்கம் ஒன்று எச்சரிக்கை..
தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை
தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை

ஸ்ரீநகர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியேற்றச் சட்டத்தினை பயன்படுத்தி  காஷ்மீரில் குடியேற முயலும் இந்தியர்கள் கொல்லப்படுவார்கள் என்று பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத இயக்கம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசானது அரசியல் சட்டபப்டி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததுடன், அமாநிலத்தை மூன்று யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் நடவடிக்கை எடுத்தது.

அதையடுத்து அங்கு அமலில் இருந்த சிறப்பு குடியேற்றச் சட்டத்தில் திருத்தங்கள் செய்தது. அதன்படி ஜம்மு காஷ்மீரில் 15 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் வெளி மாநிலத்தவர் நிரந்தரக் குடியுரிமை பெறலாம் என்றும், ஜம்மு காஷ்மீரில் 7 வருடங்கள் பயின்று பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது வகுப்பை முடித்த மாணவர்களும் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மாற்றங்களை  அறிவித்தது.   

அத்துடன் ராணுவ நடவடிக்கைகளால் புலம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர்க்கான உதவி மற்றும் மறு குடியமர்த்துதல் பிரிவிற்கான மாநில ஆணையரிடம் பதிவு செய்து கொண்டவர்களுக்கும், ஜம்மு காஷ்மீரில் நிரந்தரக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் என்று தெரிவித்திருந்தது.      

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியேற்றச் சட்டத்தினை பயன்படுத்தி  காஷ்மீரில் குடியேற முயலும் இந்தியர்கள் கொல்லப்படுவார்கள் என்று பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத இயக்கம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

தடை செய்யப்பட்ட பாகிஸ்தானிய தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின் மறு உருவ அமைப்பான ‘எதிர்ப்பு முன்னணி’ என்னும் தீவிரவாதக் குழுவானது, திங்களன்று தங்களது இணைய வழி தகவல் பரிமாற்ற பக்கங்களில் இந்த மிரட்டலை விடுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியேற்றச் சட்டத்தினை பயன்படுத்தி காஷ்மீரில் குடியேற முயலும் இந்தியர்களை பொதுமக்களாக நாங்கள் பார்ப்பதில்லை; ஆர்எஸ்எஸ் அமைப்பின் முகவர்களாகத்தான் பார்க்கிறோம். எனவே அவர்கள் கொல்லப்படுவார்கள்.

இஸ்லாத்தின் விதிமுறைகளைப் பின்பற்றும் நாங்கள் ஆயுதம் ஏந்தாதோரை அவர்கள் எந்த மதம் இனம் மற்றும் குழுவாக இருந்தாலும் தாக்குவதில்லை என்பதை முறையாக கொண்டிருக்கிறோம். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டங்களால் நாங்கள் ஏமாற மாட்டோம்.  

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com