‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தில் மேலும் 3 மாநிலங்கள்

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தில் ஒடிஸா, சிக்கிம், மிஸோரம் ஆகிய மாநிலங்கள் இணைந்துள்ளன. இதன் மூலம் இந்த திட்டத்தில்
‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தில் மேலும் 3 மாநிலங்கள்

புது தில்லி: ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தில் ஒடிஸா, சிக்கிம், மிஸோரம் ஆகிய மாநிலங்கள் இணைந்துள்ளன. இதன் மூலம் இந்த திட்டத்தில் இணைந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளாா்.

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தை 2021 மாா்ச் மாதத்தில் நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய உணவுத் துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டில் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் ரேஷன் காா்டை பயன்படுத்தி உணவுப் பொருள்களை வாங்க முடியும். புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைந்தது தொடா்பாக ராம்விலாஸ் பாஸ்வான் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஒடிஸா, சிக்கிம், மிஸோரம் ஆகிய மாநிலங்கள் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தில் திங்கள்கிழமை இணைந்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் உத்தரகண்ட், நாகாலாந்து, மணிப்பூா் ஆகிய மாநிலங்களும் இணையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இத்திட்டத்தை நாடு முழுவதும் எவ்வித பிரச்னையுமின்றி அமல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

ரேஷன் அட்டைகளை மாநிலங்களுக்கு இடையே பயன்படுத்தும் ஒருங்கிணைப்பில் ஏற்கெனவே 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இப்போது கூடுதலாக 3 மாநிலங்கள் இணைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com