24 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19-இல் தேர்தல்

கரோனா நோய்த்தொற்று பிரச்னை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 24 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது எ
தேர்தல்  ஆணையம்
தேர்தல்  ஆணையம்


புது தில்லி: கரோனா நோய்த்தொற்று பிரச்னை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 24 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. 

இதில் ஆந்திரம், குஜராத், கர்நாடகத்தில் தலா 4 இடங்களுக்கும், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் தலா மூன்று இடங்களுக்கும், ஜார்க்கண்டில் இரு இடங்களுக்கும், மணிப்பூர், மேகாலயம், அருணாசல பிரதேசம், மிúஸôரத்தில் தலா ஓரிடத்துக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. 

ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது கரோனா நோய்த்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகளை உறுதி செய்வதற்காக, அந்தந்த மாநிலங்களில் மூத்த அரசு அதிகாரி ஒருவரை சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலர்களைக் கொண்டு நியமிப்பதென தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அத்துடன், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிகளை மாநிலங்களவைத் தேர்தலுக்கான கண்காணிப்பாளராகவும் நியமித்துள்ளது.

3 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையர்கள் கூட்டம்
தில்லியில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக  நடைபெற்ற இந்த நேரடி கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள் அனைவரும் பங்கேற்றனர். 

கடந்த மார்ச் மாதத்தின் முதல் பகுதியில் விடுப்பில் அமெரிக்கா சென்ற தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவால், நாடு தழுவிய பொது முடக்கம் காரணமாக இந்தியா திரும்ப முடியாமல் போனது. இதனால் தேர்தல் ஆணையர்களின் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் சமீபத்தில் நாடு திரும்பிய சுனில் அரோரா, கரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டு தனிமைப்படுத்தப்பட்டார். தனித்திருக்க வேண்டிய காலம் முடிந்த பின்னர், அவர் திங்கள்கிழமை மீண்டும் அலுவலகம் வந்தார். இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com