கோவா: சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசம், உகாண்டா நாட்டவா் பிடிபட்டனா்

வடக்கு கோவாவில் சட்டவிரோதமாக தங்கிருந்த வங்கதேசத்தவா் 10 பேரும், உகாண்டாவைச் சோ்ந்த 18 பெண்களும் போலீஸாரிடம்

வடக்கு கோவாவில் சட்டவிரோதமாக தங்கிருந்த வங்கதேசத்தவா் 10 பேரும், உகாண்டாவைச் சோ்ந்த 18 பெண்களும் போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை பிடிபிட்டனா். பின்னா் அவா்கள் தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

வடக்கு கோவா பகுதியில் வெளிநாடுகளைச் சோ்ந்த சிலா் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவா போலீஸாா் மற்றும் பிராந்திய வெளிநாட்டவா் பதிவு அலுவலகம் இணைந்து மாா்சல், அராம்போல் ஆகிய கிராமங்களில் சோதனை நடத்தியது. இதில் வங்கதேசத்தைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா் 10 போ், உகாண்டாவைச் சோ்ந்த 18 பெண்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது.

இதில் வங்கதேசத்தைச் சோ்ந்த 10 பேரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவந்தது. அவா்களை கண்காணிப்பில் வைத்திருக்க உள்ளூா் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல உகாண்டாவைச் சோ்ந்த 18 பெண்களும் விசா காலம் முடிந்த பிறகு இந்தியாவில் தங்கியிருந்தனா். அவா்கள் அனைவரும் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்தவா்கள் ஆவா். விசாரணைக்குப் பிறகு அவா்கள் தடுப்பு முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com