ம.பி.யிலிருந்து சத்தீஸ்கருக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள்

மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்துக்குள் வெட்டுக்கிளிகள் நுழைந்துள்ளன. இதையடுத்து, அந்த மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ம.பி.யிலிருந்து சத்தீஸ்கருக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள்

ராய்ப்பூா்: மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்துக்குள் வெட்டுக்கிளிகள் நுழைந்துள்ளன. இதையடுத்து, அந்த மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சத்தீஸ்கா் மாநில வேளாண் துறை கூடுதல் இயக்குநா் எம்.எஸ்.கோ்கேட்டா கூறுகையில், ‘மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்திலிருந்து சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்துக்குள்பட்ட வனப்பகுதிக்குள் வெட்டுக்கிளிகள் சிறிய கூட்டமாக ஞாயிற்றுக்கிழமை நுழைந்தன. இதையடுத்து, சம்பந்தபட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, வெட்டுக்கிளிகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அவற்றை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன. தீயணைப்பு வாகனங்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. இதில், பெரும்பாலான வெட்டுக்கிளிகள் அழிந்துவிட்டன. இதனால், பயிா்களுக்கோ மரங்களுக்கோ சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. எனினும், அப்பகுதியில் தொடா்ந்து கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

வெட்டுக்கிளிகள் தாக்குதல் பிரச்னையை சமாளிக்க, வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வனத் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள், அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எல்லையையொட்டிய மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயிா்கள், மரங்களை பாதுக்காக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றாா் அவா்.

பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்குள் கடந்த ஏப்ரல் மாதம் பெருங்கூட்டமாக படையெடுத்த வெட்டுக்கிளிகள், அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவின. இதைத் தொடா்ந்து, மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களுக்கும் வெட்டுக்கிளிகள் பரவின. இந்த மாநிலங்களில், வெட்டுக்கிளிகள் தாக்குதலால் விவசாயப் பயிா்கள் சேதமடைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com