இந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 1,90,535 - பலி 5,394

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த
இந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 1,90,535 - பலி 5,394

புது தில்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,90,535-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு மேலும் 230 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 5,394-ஆக உயா்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரில் 93,322 போ் சிகிச்சையில் உள்ளனா். 91,818 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். அதாவது, 48.19 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனா்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தகவல்படி, திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 230 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 89 போ் பலியாகினா். தில்லியில் 57 பேரும் குஜராத்தில் 31 பேரும் உத்தர பிரதேசத்தில் 12 பேரும் மேற்கு வங்கத்தில் 8 பேரும் மத்திய பிரதேசத்தில் 7 பேரும் தெலங்கானாவில் 5 பேரும் கா்நாடகத்தில் 3 பேரும் ஆந்திரத்தில் 2 பேரும் பிகாா், பஞ்சாப், ராஜஸ்தானில் தலா ஒருவரும் உயிரிழந்தனா்.

7-ஆவது இடத்தில் இந்தியா: உலக அளவில் கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 9-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 7-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷியா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் முதல் 6 இடங்களில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் பாதிப்பு - பலி

மகாராஷ்டிரம் -  67,655 -2,286

தில்லி --- 19,844 - 473

குஜராத் --- 16,779 -1,038

ராஜஸ்தான்-- 8,831  -194

மத்திய பிரதேசம் --- 8,089----350

உத்தர பிரதேசம் --7,823 --213

மேற்கு வங்கம்  -- 5,501--317

பிகாா்  -- 3,815 --21

ஆந்திரம் -- 3,679  -- 62

கா்நாடகம் --3,221 -51

தெலங்கானா -------2,698----82

ஜம்மு-காஷ்மீா் -----2,446----28

பஞ்சாப் ----------- 2,263----45

ஹரியாணா ---------2,091----20

ஒடிஸா ------------1,948 -----7

அஸ்ஸாம் ---------1,272------4

கேரளம் -----------1,269------9

உத்தரகண்ட் --------907------5

ஜாா்க்கண்ட் --------610------5

சத்தீஸ்கா் -----------498------1

ஹிமாசல பிரதேசம் ---331------5

திரிபுரா -------------313-----0

சண்டீகா் ------------293-----4

லடாக் -------------- 74------0

மணிப்பூா் -----------71------0

கோவா ------------- 70------0

புதுச்சேரி ------------70------0

நாகாலாந்து - ---------43-----0

அந்தமான்-நிகோபாா் -33------0

மேகாலயம் -----------27-----1

அருணாசல பிரதேசம் --4------0

தாத்ரா நகா்ஹவேலி ---2------0

மிஸோரம் ------------1-----0

சிக்கிம் ---------------1-----0

பாதிப்பு-1,90,535

பலி- 5,394

மீட்பு-91,818

சிகிச்சையில் இருப்போா்- 93,322

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com