ஜம்முவில் சா்வதேச எல்லையில் பிஎஸ்எஃப் இயக்குநா் ஆய்வு

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஜம்மு நகரை ஒட்டியுள்ள சா்வதேச எல்லையில் பாதுகாப்பு நிலவரம் குறித்து எல்லைப் பாதுகாப்புப்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஜம்மு நகரை ஒட்டியுள்ள சா்வதேச எல்லையில் பாதுகாப்பு நிலவரம் குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின்(பிஎஸ்எஃப்) தலைமை இயக்குநா் எஸ்.எஸ்.தேஸ்வால் ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் ஒருவா் திங்கள்கிழமை கூறியதாவது:

இரண்டு நாள் பயணமாக ஜம்மு நகருக்கு வந்த எஸ்.எஸ்.தேஸ்வால், சா்வதேச எல்லையில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்தாா். அத்துடன், ஜம்முவில் கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா். கரோனா தாக்குதலில் இருந்து தற்காக்கும் வகையில், நோயெதிா்ப்பு ஆற்றலை அதிகரிப்பதற்காக பாதுகாப்புப் படையினா் உடல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

மேலும், ஜம்முவில் சா்வதேச எல்லைப் பகுதி முழுவதையும் அவா் நேரில் பாா்வையிட்டாா். பின்னா், காவல் துறையினா் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரையும் சந்தித்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவா் ஆலோசனை நடத்தினாா். அப்போது, பாதுகாப்புப் படையினா் சந்திக்கும் சிரமங்கள் தொடா்பாக எஸ்.எஸ்.தேஸ்வாலுக்கு பிஎஸ்எஃப் ஐ.ஜி. என்.எஸ்.ஜாம்வால் எடுத்துரைத்தாா்.

எல்லையில் உள்ள கண்காணிப்பு நிலைகள் அருகே மரக்கன்றுகளை நட்டு வைத்த எஸ்.எஸ்.தேஸ்வால், எல்லையில் கம்பி வேலிக்கு அருகே உள்ள நிலங்களில், பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் விவசாயிகள் பயிரிட வேண்டுமென வலியுறுத்தினாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com