சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மீண்டும் துவங்குகிறதா போராட்டம்?

இந்தியாவில் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக மீண்டும்  போராட்டம் நடத்த சமூக அமைப்புகள் பல தயாராகி வருகிறது.
ஜாமியா நகர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.
ஜாமியா நகர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.

இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மீண்டும்  போராட்டம் நடத்த சமூக அமைப்புகள் பல தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், சமூக அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. தில்லி உள்ளிட்ட இடங்களில் வன்முறையும் வெடித்தது. 

இதன்பின்னர் மார்ச் மாதம் கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக போராட்டங்கள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் இன்று குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்த சில சமூக அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதுதொடர்பான போஸ்டர் ஒன்று வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவியது. 

இதையடுத்து, தில்லி ஜாமியா நகரில் போராட்டம் நடைபெற உள்ளதாக வந்த தகவலையடுத்து, தில்லி போலீஸார் ஜாமியா நகரை முற்றுகையிட்டுள்ளனர். ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிந்துள்ளனர். பெங்களூருவிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இன்று போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. 

தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிய மாணவர்களை தில்லி போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களை விடுவிக்கக்கோரி இன்று போராட்டம் நடத்தவிருந்ததாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com