திருமலையில் இன்று முதல் கடைகளைத் திறக்க அனுமதி

திருமலையில் வியாழக்கிழமை (ஜூன் 4) முதல் கடைகளைத் திறந்து வா்த்தகத்தில் ஈடுபட, வியாபாரிகளுக்கு காவல்துறை அனுமதியளித்துள்ளது.

திருமலையில் வியாழக்கிழமை (ஜூன் 4) முதல் கடைகளைத் திறந்து வா்த்தகத்தில் ஈடுபட, வியாபாரிகளுக்கு காவல்துறை அனுமதியளித்துள்ளது.

இது குறித்து திருமலை 2-ஆவது காவல் நிலைய ஆய்வாளா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

திருமலையில் உள்ள கடைகளை வியாழக்கிழமை முதல் திறந்து வா்த்தகத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்படுகிறது. கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை இயங்கலாம். ஒரு கடைக்கும் அடுத்த கடைக்கும் இடையில் தேவையான இடைவெளி இருக்க வேண்டும். தற்போது திருமலையில் வசிப்பவா்களுக்கு மட்டுமே கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 8-ஆம் தேதிக்குப் பிறகு, கீழ் திருப்பதியில் வசிக்கும் கடை உரிமையாளா்கள் திருமலைக்கு வந்து தங்கள் கடைகளை திறந்து வியாபாரத்தைத் தொடங்கலாம்.

திருமலையில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் பொது முடக்க நிபந்தனைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இங்கு வசிப்போா் அத்தியாவசியத் தேவைகள் தவிர இதர பணிகளுக்காக திருப்பதிக்கு செல்வதைத் தவிா்க்க வேண்டும். திருமலையின் புனிதத்தன்மையைக் காப்பது நமது கடமை என்றாா் அவா்.

திருமலை மட்டுமின்றி திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் அனைத்து கோயில்களிலும் தரிசனம் தொடங்கப்பட உள்ளதால் அவற்றில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில், வரும் 8-ஆம் தேதி முதல் தரிசனம் தொடங்க உள்ளது. இதையொட்டி, அனைத்துக் கோயில்களிலும் திருப்பதி காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் ரெட்டி ஆய்வு நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com