புயல் நிவாரண நிதியாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

புயல் நிவாரண நிதியாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களை முதல்வர் உத்தவ் தாக்கரே பார்வையிட்டார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களை முதல்வர் உத்தவ் தாக்கரே பார்வையிட்டார்.

அரபிக்கடலில் உருவான 'நிசர்கா' புயல் மகாராஷ்டிர மாநிலம் அலிபாக் அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 115 கி.மீ. வேகத்தில் வீசியது. 

இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக ராய்காட் மாவட்டத்தில் சேதங்கள் அதிகமாக உள்ளன. 

முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று ராய்காட் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். மேலும் ராய்காட் பகுதியில் புயல் சேதங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அவசர நிவாரண நிதியாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். 

புயல் சேதங்களை பார்வையிட்ட முதல்வருடன், அமைச்சர்கள் ஆதித்யா தாக்கரே, அஸ்லம் ஷேக் மற்றும் பலர் சென்றனர். 

முன்னதாக, விவசாயிகளுக்கும், கிராம மக்களுக்கும் விரைவான உதவி வழங்கப்படுவதை உறுதி செய்ய, இரண்டு நாட்களுக்குள் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

புயலால் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதி வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com