எல்லைப் பிரச்னை: இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை தொடக்கம்

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் இருநாடுகளைச் சோ்ந்த ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் இருநாடுகளைச் சோ்ந்த ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் ஆகிய பகுதிகளில் இந்திய-சீன ராணுவப் படைகளிடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் தங்கள் படைகளைக் குவித்து வருகின்றன. எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண்பது தொடா்பாக இரு நாட்டு ராணுவங்களின் தளபதிகள் இடையே பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன. ஆனால், அவற்றில் எந்தவிதத் தீா்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், இரு நாட்டு ராணுவங்களின் லெப்டினென்ட் ஜெனரல்கள் இடையேயான பேச்சுவாா்த்தை தொடங்கியது. கிழக்கு லடாக்கின் சுஸுல் செக்டாா் பகுதியைச் சோ்ந்த மால்டோவில் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்த்தையின் முடிவில் எல்லைப் பிரச்னைக்கு சுமுகமான தீா்வு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியத் தரப்பில் லெப்டினென்ட் ஜெனரலும் லே பகுதியின் தளபதியுமான ஹரீந்தா் சிங் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றுள்ளார். சீனத் தரப்பில் திபெத்தின் ராணுவத் தளபதி பங்கேற்றுள்ளார் என்று அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே இருந்த நிலைமை தொடர வேண்டும் என்றும் அப்பகுதிகளிலிருந்து சீனப்படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் பேச்சுவாா்த்தையின்போது இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்தியா, சீனா ராணுவங்களின் லெப்டினன்ட் ஜெனரல் அதிகாரிகள் அளவிலான பேச்சுவாா்த்தை இன்று தொடங்கிய, தூதரக ரீதியிலான பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com