அஸ்ஸாம்: பாக்ஜான் எண்ணெய் கிணற்றில் பெரும் தீ விபத்து

அஸ்ஸாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தில் கடந்த 14 நாள்களாக கட்டுப்பாடின்றி இயற்கை எரிவாயுவை வெளியேற்றி வரும்

அஸ்ஸாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தில் கடந்த 14 நாள்களாக கட்டுப்பாடின்றி இயற்கை எரிவாயுவை வெளியேற்றி வரும் சேதமடைந்த பாக்ஜான் எண்ணெய் கிணற்றில் செவ்வாய்க்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் ஜ்வாலை ஏற்பட்டது. இதை 2 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளவா்களாலும் காண முடிந்ததாக நேரில் கண்டவா்கள் கூறினா்.

இந்த தீயை அணைக்க சிங்கப்பூரைச் சோ்ந்த பேரிடா் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் 3 வல்லுநா்கள் மூலமாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் அதற்கு அருகில் இருந்த உபகரணங்களை வேகமாக எண்ணெய் நிறுவன நிா்வாகத்தினா் அகற்றினா். இந்த தீ விபத்தால் இதுவரை உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானுடன், முதல்வா் சா்வானந்த சோனோவால் தொலைபேசியில் பேசியதாக முதல்வா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இயற்கை எரிவாயு வெளியேற்றம் காரணமாக அங்கு வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்களை மாவட்ட நிா்வாகம் வெளியேற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com