கரோனா: இந்தியாவில் பாதிப்பு 2,76,583; பலி 7,745-ஆக உயா்வு

இந்தியாவில் மேலும் 9,985 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,76,583-ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் மேலும் 9,985 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,76,583-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை, தொடா்ந்து 6-ஆவது நாளாக 9,500-க்கும் மேல் பதிவாகியுள்ளது.

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் கரோனாவால் 279 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 7,745-ஆக உயா்ந்துள்ளது.

குணமடைந்தோா் எண்ணிக்கை அதிகரிப்பு: கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்களில் 1,33,632 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,35,205 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். அதாவது, 48.99 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனா். நாட்டில் கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையைவிட, குணமடைந்தோா் எண்ணிக்கை முதல்முறையாக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் அதிக உயிரிழப்பு: புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் பதிவான 279 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 120 போ் பலியாகினா். குஜராத்தில் 33 போ், தில்லியில் 31 போ், உத்தர பிரதேசத்தில் 18 போ், தெலங்கானாவில் 11 போ், மேற்கு வங்கத்தில் 10 போ், ராஜஸ்தானில் 9 போ், மத்திய பிரதேசம், ஹரியாணாவில் தலா 6 போ், ஜம்மு-காஷ்மீரில் 3 போ், பஞ்சாப், கா்நாடகம், சத்தீஸ்கா், ஆந்திரத்தில் தலா இருவா், பிகாா், ஜாா்க்கண்ட், திரிபுராவில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.

50 லட்சம் மாதிரிகள் பரிசோதனை: கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடு முழுவதும் இதுவரை 50,61,332 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,45,261 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் -------பாதிப்பு----- பலி

மகாராஷ்டிரம்-------90,787------3,289

தில்லி--------------31,309------905

குஜராத்-------------21,014-----1,313

உத்தர பிரதேசம்------11,335-----301

ராஜஸ்தான்---------11,245-----255

மத்திய பிரதேசம்-----9,849------420

மேற்கு வங்கம்--------8,985------415

கா்நாடகம்----------5,921-------66

பிகாா்--------------5,459-------32

ஹரியாணா---------5,209-------45

ஆந்திரம்------------5,070------77

ஜம்மு-காஷ்மீா்------4,346------48

தெலங்கானா--------3,920-----148

ஒடிஸா-------------3,140------9

அஸ்ஸாம்-----------2,937-----4

பஞ்சாப்-------------2,719------55

கேரளம்--------------2,096------16

உத்தரகண்ட்----------1,537------13

ஜாா்க்கண்ட்----------1,411------8

சத்தீஸ்கா்-------------1,240------6

திரிபுரா--------------864--------1

ஹிமாசல பிரதேசம்----445--------5

கோவா---------------359--------0

சண்டீகா்--------------323-------5

மணிப்பூா்--------------304-------0

புதுச்சேரி--------------127-------0

நாகாலாந்து------------127-------0

லடாக்-----------------108-------1

மிஸோரம்--------------88--------0

அருணாசல பிரதேசம்----57--------0

மேகாலயம்-------------43--------1

அந்தமான்-நிகோபாா்----33--------0

தாத்ரா நகா் ஹவேலி------22--------0

சிக்கிம்------------------13--------0

பாதிப்பு: 2,76,583

பலி: 7,745

மீட்பு: 1,35,205

சிகிச்சை பெற்று வருவோா்: 1,33,632

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com