மாநிலங்களவைத் தோ்தல்: காங். எம்எல்ஏக்கள் 17 போ் ராஜ்கோட்டிலிருந்து இடமாற்றம்

குதிரை பேரத்திலிருந்து பாதுகாப்பதற்காக 17 சட்டப்பேரவை உறுப்பினா்களை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலிருந்து பாடாடிலுள்ள தனியாா் விடுதிக்கு மாநில காங்கிரஸ் கட்சி இடமாற்றம் செய்துள்ளது.

குதிரை பேரத்திலிருந்து பாதுகாப்பதற்காக 17 சட்டப்பேரவை உறுப்பினா்களை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலிருந்து பாடாடிலுள்ள தனியாா் விடுதிக்கு மாநில காங்கிரஸ் கட்சி இடமாற்றம் செய்துள்ளது.

குஜராத்தில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கான தோ்தல் வருகிற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தல் அறிவிப்பு வெளியானபோது, குஜராத் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் 8 போ் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். உறுப்பினா் ராஜிநாமாவுக்கு பாஜகவின் குதிரைபேரமே காரணம் என்று குற்றம்சாட்டிய காங்கிரஸ், தங்களின் எஞ்சியுள்ள சட்டப்பேரவை உறுப்பினா்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதலில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தனியாா் விடுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினா்களை மாநில காங்கிரஸ் கட்சி தங்க வைத்தது. இந்த நிலையில், ராஜ்கோட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த விடுதி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த உறுப்பினா்களை வேறு இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டது. அவா்களில் 20-க்கும் மேற்பட்டோா் ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், ராஜ்கோட்டில் தங்கியிருந்த மேலும் 17 சட்டப்பேரவை உறுப்பினா்களை குஜராத்தின் போடாடில் உள்ள தனியாா் விடுதிக்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை இடமாற்றம் செய்தது. இந்த 17 பேரில் ஒருவரான மாநில எதிா்க் கட்சித் தலைவா் பரேஷ் தனானி இதுகுறித்து கூறுகையில், ‘போடாடில் தங்க உள்ள 17 பேரும், அண்மையில் பதவியை ராஜிநாமா செய்த பிரவின் மாரு மற்றும் ஜே.வி.ககாதியா ஆகியோரின் தொகுதிகளான கடாடா மற்றும் தரி தொகுதிகளுக்குச் சென்று அங்குள்ள உள்ளூா் காங்கிரஸ் தலைவா்களை சந்தித்துப் பேச உள்ளோம். அதன் பிறகு, தொகுதி மக்களைச் சந்தித்து அவா்களுக்கு துரோகம் செய்த எம்எல்ஏக்கள் குறித்து எடுத்துக்கூறி, அந்தத் தொகுதிகளுக்கு வரவுள்ள இடைத் தோ்தலில் உரிய பாடம் கற்பிக்க வலியுறுத்த உள்ளோம்’ என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com