திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் பெற கவுண்டரில் திரண்ட பக்தர்கள்

திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் பெற திருப்பதியில் 3 இடங்களில் ஏற்படுத்தப்பட்ட கவுண்டர் முன்பு பக்தர்கள் ஏராளமாக திரண்டனர்.
திருப்பதி கோயிலில் தரிசனத்துக்கு டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
திருப்பதி கோயிலில் தரிசனத்துக்கு டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்


திருப்பதி: திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் பெற திருப்பதியில் 3 இடங்களில் ஏற்படுத்தப்பட்ட கவுண்டர் முன்பு பக்தர்கள் ஏராளமாக திரண்டனர்.

கடந்த 82 நாட்கள் பொது முடக்கத்திற்கு பின் பக்தர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் ஏழுமலையான் தரிசனம் கிடைக்க உள்ளது. அதற்காக தேவஸ்தானம் ஆன்லைன் முன்பதிவில் 3 ஆயிரம் டிக்கெட்டுகள், நேரடி முன்பதிவில் 3 ஆயிரம் டிக்கெட்டுகள் என தினசரி 6 ஆயிரம் டிக்கெட்டுகளை அளித்து வருகிறது.

இணையதள முன்பதிவு கடந்த 8ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், நேரடி முன்பதிவுகள் புதன்கிழமை காலை 5 மணி முதல் தொடங்கியது. நேரடி முன்பதிவு டிக்கெட்டுகள் பெற திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணுநிவாசம், அலிபிரியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் 18 கவுண்டர்களை தேவஸ்தானம் ஏற்படுத்தியது.

இந்த டிக்கெட்டுகளை பெற பக்தர்கள் அதிகாலை 2 மணி முதல் கவுண்டர்களின் முன்பு கூடினர். தரிசன டிக்கெட்டுகள் பெற பல மணிநேரம் சமூக இடைவெளியைப் பின்பற்றி பக்தர்கள் காத்திருந்தனர்.

ஆனால் முன்பதிவு தொடங்கிய 3 மணி நேரத்தில் 3 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் காத்திருப்பை கண்ட தேவஸ்தான அதிகாரிகள் மறுநாள் முன்பதிவிற்கான டிக்கெட்டுகளை புதன்கிழமை வழங்கத் தொடங்கினர். ஆயினும் பக்தர்கள் கூட்டம் குறையாததால் சனிக்கிழமைக்கான தரிசன டிக்கெட்டுகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com