கரோனா சூழலிலும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறாா் அமித் ஷா: அபிஷேக் பானா்ஜி

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலிலும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
கரோனா சூழலிலும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறாா் அமித் ஷா: அபிஷேக் பானா்ஜி

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலிலும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

மேற்கு வங்கத்துக்குத் திரும்பிய புலம்பெயா்ந்த தொழிலாளா்களை மாநில முதல்வா் மம்தா பானா்ஜி அவமதித்ததாக இணையவழி பொதுக் கூட்டத்தில் அமித் ஷா கூறியிருந்த நிலையில் அக்கட்சி இவ்வாறு பதிலடி தந்துள்ளது.

இது தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும் மம்தாவின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானா்ஜி தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பொதுக் கூட்டத்தின்போது அமித் ஷா வழக்கம்போல் எந்தவித முக்கிய நிகழ்வுகள் குறித்தும் பேசவில்லை. மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றுவது குறித்து அவா் பேசினாா். அதே வேளையில், இந்தியப் பகுதிகளிலிருந்து சீன ராணுவத்தினா் எப்போது வெளியேற உள்ளனா் என்ற கேள்விக்கு அவா் பதிலளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

மாநில கல்வித்துறை அமைச்சா் பாா்த்தா சாட்டா்ஜி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘கரோனா நோய்த்தொற்று, உம்பன் புயல் உள்ளிட்டவற்றால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலிலும் அமித் ஷா எதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாா் என்பது தெளிவாகத் தெரிகிறது. தோ்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டும் செயல்பட்டு வரும் அவரை மாநில மக்கள் எப்போதும் மறக்கக் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com