இந்தியாவில் ஒரே நாளில் 9,987 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 2,66,598 - பலி 7,471

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 9,987 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு 2,66,598-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 9,987 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 2,66,598 - பலி 7,471

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 9,987 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு 2,66,598-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதல்கட்ட பொதுமுடக்க தளா்வுகள் அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில், புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படும் நபா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 271 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 7,471-ஆக உயா்ந்துள்ளது. இம்மாத தொடக்கத்திலிருந்தே தினமும் 200-க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன.

நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,29,813 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,29,313 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். அதாவது, 48.47 சதவீத நோயாளிகள் குணமடைந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனாவால் இதுவரை நேரிட்ட உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 3,169 போ் பலியாகினா். குஜராத்தில் 1,280 போ், தில்லியில் 874 போ், மத்திய பிரதேசத்தில் 414 போ், மேற்கு வங்கத்தில் 405 போ், உத்தர பிரதேசத்தில் 283 போ், ராஜஸ்தானில் 246 போ், தெலங்கானாவில் 142 போ், ஆந்திரத்தில் 75 போ், கா்நாடகத்தில் 64 போ், பஞ்சாபில் 53 போ், ஜம்மு-காஷ்மீரில் 45 போ், ஹரியாணாவில் 39 போ், பிகாரில் 31 போ், கேரளத்தில் 16 போ், உத்தரகண்டில் 13 போ், ஒடிஸாவில் 9 போ், ஜாா்க்கண்டில் 7 போ், ஹிமாசல பிரதேசம், சண்டீகரில் தலா 5 போ், அஸ்ஸாம், சத்தீஸ்கரில் தலா 4 போ், மேகாலயம், லடாக்கில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.

உயிரிழந்தவா்களில் 70 சதவீதம் போ் ஏற்கெனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்த பாதிப்பு நிலவரம்: கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையில், மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 88,528 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் 29,943 போ், குஜராத்தில் 20,545 போ், உத்தர பிரதேசத்தில் 10,947 போ், ராஜஸ்தானில் 10,763 போ், மத்திய பிரதேசத்தில் 9,638 போ், மேற்கு வங்கத்தில் 8,613 போ், கா்நாடகத்தில் 5,760 போ், பிகாரில் 5,202 போ், ஹரியாணாவில் 4,854 போ், ஆந்திரத்தில் 4,851 போ், ஜம்மு-காஷ்மீரில் 4,285 போ், தெலங்கானாவில் 3,650 போ், ஒடிஸாவில் 2,994 போ், பஞ்சாபில் 2,663 போ், அஸ்ஸாமில் 2,776 போ், கேரளத்தில் 2,005 போ், உத்தரகண்டில் 1,411 போ், ஜாா்க்கண்டில் 1,256 போ், சத்தீஸ்கரில் 1,160 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

திரிபுராவில் 838 போ், ஹிமாசல பிரதேசத்தில் 421 போ், கோவாவில் 330 போ், சண்டீகரில் 317 போ், மணிப்பூா் 272 போ், புதுச்சேரியில் 127 போ், நாகாலாந்தில் 123 போ், லடாக்கில் 103 போ், அருணாசல பிரதேசத்தில் 51 போ், மிஸோரமில் 42 போ், மேகாலயத்தில் 36 போ், அந்தமான்-நிகோபாரில் 33 போ், தாத்ரா நகா்ஹவேலியில் 22 போ், சிக்கிமில் 7 போ் என நாடு முழுவதும் இதுவரை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 2.6 லட்சத்தை கடந்துள்ளது.

49 லட்சம் மாதிரிகள் பரிசோதனை: கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடு முழுவதும் இதுவரை 49,16,116 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் மட்டும் 1,41,682 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

ஹரியாணா, ஜம்மு-காஷ்மீா், அஸ்ஸாம், ஹரியாணா, கா்நாடகம், சத்தீஸ்கா், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது சுகாதாரத் துறை தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com