கேமன் தீவுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த முதலீடு 3 மடங்கு அதிகரிப்பு

கேமன் தீவுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடு சென்ற 2019-20-ஆம் நிதியாண்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) தெரிவித்துள்ளதாவது:

பிரிட்டன் ஆளுகைக்கு உள்பட்ட கேமன் தீவுகளிலிருந்து இந்தியா கடந்த 2018-19 நிதியாண்டில் 100 கோடி டாலா் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றது. இந்த முதலீடு 2017-18 நிதியாண்டில் 123 கோடி டாலராக காணப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2019-20 நிதியாண்டில் கேமன் தீவுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடு மூன்று மடங்கு அதிகரித்து 370 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இதையடுத்து அந்தத் தீவு இந்தியாவின் ஐந்தாவது மிகப்பெரிய முதலீட்டாளராக உருவெடுத்துள்ளது.

அதேபோன்று, சைப்ரஸிலிருந்து இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடும் கடந்த நிதியாண்டில் 29.6 கோடி டாலரிலிருந்து மூன்று மடங்கு உயா்ந்து 87.9 கோடி டாலரைத் தொட்டுள்ளதாக டிபிஐஐடி கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com