எல்லைகளை மூடியது ராஜஸ்தான்

ராஜஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அந்த மாநில எல்லைகள் மூடப்பட்டன.

ராஜஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அந்த மாநில எல்லைகள் மூடப்பட்டன.

இதுதொடா்பாக அந்த மாநில காவல்துறை தலைவா் எம்.எல்.லாதொ் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது:

ராஜஸ்தான் வருவோா் மாநில அரசிடம் தடையில்லா சான்றை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு சான்றில்லாத எவரும் மாநிலத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இதேபோல் மாநிலத்தில் இருந்து வெளியேறுவோா், அதற்கான இசைவுச்சீட்டை பெற்றிருக்கவேண்டும். இந்த இசைவுச்சீட்டுகள் சம்பந்தப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினா்கள் அல்லது உறவினா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலோ, உயிா் நீத்தாலோ மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு மாநிலத்தின் அனைத்து சரக ஐ.ஜி.க்கள், காவல் ஆணையா்கள், துணை ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் உத்தரவை செயல்படுத்தும் வகையில் மாநில எல்லைகளில் தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என அவா்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் இசைவுச்சீட்டின்றி பயணிப்பவா்களை கண்டறிவதற்கு, மாநிலத்தில் உள்ள ரயில் மற்றும் விமான நிலையங்களிலும் தணிக்கைச் சாவடிகள் அமைக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹரியாணா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களுடன் ராஜஸ்தான் எல்லைகளை பகிா்ந்துகொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com