கரோனா அதிகரிப்பால் ராஜஸ்தான் மாநில எல்லைகளுக்கு சீல்!

ராஜஸ்தானில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில் புதன்கிழமை அனைத்து மாநில எல்லைகளையும் சீல் வைக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
கரோனா அதிகரிப்பால் ராஜஸ்தான் மாநில எல்லைகளுக்கு சீல்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில் புதன்கிழமை அனைத்து மாநில எல்லைகளையும் சீல் வைக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து காவல்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு இயக்குநர் ஜெனரல் எம்.எல். லெதர் அனுப்பிய உத்தரவில்,,

மாநில அதிகாரிகளிடம், 'நோ ஆப்ஜெக்ஷன் சான்றிதழ்' (என்ஓசி) இல்லாமல் எந்தவொரு நபரும் ராஜஸ்தான் எல்லைக்குள் நுழையவோ அல்லது பாஸ் இல்லாமல் வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இது தொடர்பாக அனைத்து காவல் ஆய்வாளர்கள், ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்களுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க உடனடியாக மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், இதுபோன்ற அனைத்து ஏற்பாடுகளும் அடுத்த ஏழு நாட்களுக்குள்  செயல்படுத்தப்படும். 

மாநிலங்களுக்கு இடையேயான வழிகள், தவிர ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் அனுமதியுடன் நுழைவு பாஸை பெற்றுக்கொள்ளலாம். மேலும், மருத்துவமனையில் அனுமதிப்பது அல்லது இறப்பது போன்ற அவசரக்கால வழக்குகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும். 

ராஜஸ்தான் இதுவரை மாநிலத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11,368 ஆக அதிகரித்துள்ளது, புதன்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 123 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com