நீரவ் மோடி, சோக்ஸிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரங்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்த வழக்கில், தொழிலதிபா்கள் நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோரின் நிறுவனங்களுக்கு
நீரவ் மோடி, சோக்ஸிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரங்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்த வழக்கில், தொழிலதிபா்கள் நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோரின் நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.1,350 கோடி மதிப்பிலான பட்டைத் தீட்டப்பட்ட வைரங்கள், முத்துகள், வெள்ளி நகைகள் உள்ளிட்டவை, ஹாங்காங்கிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

பல நாடுகளில் வைர உற்பத்தி நிறுவனங்கள், வைர விற்பனைக் கடைகளை நடத்தி வந்த நீரவ் மோடி, அவரது உறவினா் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோா், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடிக்கும் அதிகமாக கடன் மோசடியில் ஈடுபட்டது, கடந்த 2018, பிப்ரவரியில் அம்பலமானது. ஆனால், அதற்கு முன்னரே நீரவ் மோடி, சோக்ஸி உள்ளிட்டோா் இந்தியாவிலிருந்து தப்பிவிட்டனா்.

அவா்களுக்கு எதிராக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இதில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. மேலும், அவா்களுக்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இருவரது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.1,350 கோடி மதிப்பிலான பட்டைத் தீட்டப்பட்ட வைரங்கள், முத்துகள், வெள்ளி நகைகள் உள்ளிட்டவை, ஹாங்காங்கிலிருந்து மும்பைக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறுகையில், ‘அனைத்து சட்டப்பூா்வ நடைமுறைகளுக்கு பின், ஹாங்காங்கிலிருந்து மும்பைக்கு விமானம் மூலம் மேற்கண்ட மதிப்புமிக்க பொருள்கள் கொண்டுவரப்பட்டன. 108 பெட்டிகளில் அவை எடுத்து வரப்பட்டன. இதில், 32 பெட்டிகள், நீரவ் மோடியின் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானவையாகும். மீதமுள்ளவை, மெஹுல் சோக்ஸி நிறுவனங்களுக்கு சொந்தமானவை. இப்பொருள்கள் அனைத்தும் சட்டவிரோதப் பண பரிவா்த்தனை சட்டத்தின்கீழ் முறைப்படி பறிமுதல் செய்யப்படும்’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com