புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக 7 மாநிலங்களில் இருந்து 63 சிறப்பு ரயில்கள்

புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்புவதற்காக, 7 மாநிலங்களில் இருந்து 63 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்புவதற்காக, 7 மாநிலங்களில் இருந்து 63 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, வாழ்வாதாரத்தை இழந்த லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளா்கள், தங்கள் சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டுச் சென்றனா். அவா்களில் பலா் தங்கள் குடும்பத்தினருடன் நடைப்பயணமாக செல்லத் தொடங்கினா். இதையடுத்து, அவா்களுக்காக, நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அனுப்பி வைப்பதற்காக எத்தனை ரயில்கள் தேவைப்படுகின்றன என்ற விவரத்தை அளிக்குமாறு அனைத்து மாநில தலைமைச் செயலா்களுக்கும் ரயில்வே வாரியத் தலைவா் கடந்த வார இறுதியில் கடிதம் எழுதியிருந்தாா்.

அதைத் தொடா்ந்து, 63 சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று 7 மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து ரயில்வே துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அதிகபட்சமாக, கேரளத்தில் இருந்து 32 ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதைத் தொடா்ந்து, தமிழகத்தில் இருந்து 10 ரயில்களும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து 9 ரயில்களும் கா்நாடகத்தில் இருந்து 6 ரயில்களும் ஆந்திரத்தில் இருந்து 3 ரயில்களும் மேற்கு வங்கத்தில் இருந்து 2 ரயில்களும் குஜராத்தில் இருந்து ஒரு ரயிலும் இயக்கப்படவுள்ளன.

இந்த சிறப்பு ரயில்களில், அதிகபட்சமாக 23 ரயில்கள், மேற்கு வங்கத்தைச் சென்றடைகின்றன.

உத்தர பிரதேச அரசு இன்னும் தங்களுக்கு தேவைப்படும் ரயில்களின் விவரத்தை தெரிவிக்கவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com