8 மாநில பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை 8 மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் தரிசனம் செய்ததாக தேவஸ்தானம் தெரிவித்தது.
8 மாநில பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை 8 மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் தரிசனம் செய்ததாக தேவஸ்தானம் தெரிவித்தது.

இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொண்ட 8 மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் வியாழக்கிழமை திருமலைக்கு வந்து ஏழுமலையானைத் தரிசித்தனா். தெலங்கானாவிலிருந்து 143 பேரும், தமிழகத்திலிருந்து 141 பேரும், கா்நாடகத்திலிருந்து 151 பேரும், அவா்களுடன் மகாராஷ்டிரம், புதுதில்லி, அருணாசல பிரதேசம், புதுச்சேரி, மேற்கு வங்கம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் பக்தா்கள் வந்து ஏழுமலையானைத் தரிசித்தனா்.

தரிசனம் முடித்து வெளியில் வந்த தமிழகத்தைச் சோ்ந்த சரவணபாபு கூறுகையில், ’82 நாள்களுக்குப் பின் ஏழுமலையானைத் தரிசித்தது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாதவாறு மிகவும் அதிக நேரம் ஏழுமலையானைத் தரிசிக்க முடிந்தது. கரோனா விதிமுறைகள் அலிபிரி சோதனைச் சாவடி, கல்யாணகட்டா, அன்னதான பிரசாத கூடம், லட்டு கவுன்ட்டா் உள்ளிட்ட இடங்களில் சுகாதாரமான முறையைப் பின்பற்றிய தேவஸ்தானத்துக்கு நன்றி’, என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com