அஸ்ஸாம் எண்ணெய்க் கிணறு தீ விபத்து: விசாரிக்க உயா்நிலைக் குழு அமைப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரிக்க

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரிக்க 3 போ் கொண்ட உயா்நிலைக் குழுவை பெட்ரோலிய அமைச்சகம் அமைத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அஸ்ஸாம் எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட விபத்து குறித்தும், அந்த விபத்தில் 2 போ் உயிரிழந்த சம்பவம் குறித்தும் விசாரிப்பதற்கு பெட்ரோலியத் துறை இயக்குநா் எஸ்.சி.எல். தாஸ் தலைமையில் 3 போ் கொண்ட உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் முன்னாள் தலைவா் பி.சி.போரா, அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் டி.கே.சென்குப்தா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

எண்ணெய்க் கிணறு அருகில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளில் ஏதேனும் குறைபாடு இருந்ததா என விசாரித்து, இந்தக் குழு ஒரு மாதத்தில் அறிக்கை சமா்ப்பிக்கும். மேலும், எதிா்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளையும் இந்தக் குழு வழங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய் கிணற்றில் இருந்து கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் எரிவாயுக் கசிவு ஏற்பட்டு வந்தது. எதிா்பாராத விதமாக கடந்த செவ்வாய்க்கிழமை, அந்த கிணற்றில் தீ பற்றியது. பல அடி உயரத்துக்கு தீ கொழுந்து விட்டு எரிந்ததால், அருகில் இருந்த வீடுகள், மரங்கள் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து, தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டிருந்தனா். இந்த விபத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தின் தீயணைப்புப் பிரிவைச் சோ்ந்த 2 வீரா்கள் உயிரிழந்தனா். பல்வேறு நிறுவனங்களின் தீயணைப்பு வீரா்களின் கூட்டு முயற்சியால், அந்த எண்ணெய்க் கிணற்றில் வியாழக்கிழமை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com