தேவஸ்தான ஊழியருக்கு கரோனா: திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் மூடல்

தேவஸ்தான ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிந்தராஜ சாமி கோவில்
கோவிந்தராஜ சாமி கோவில்

திருப்பதி: தேவஸ்தான ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுபாட்டின் கீழ் திருப்பதியில் உள்ள பத்து கோவில்களில் கோவிந்தராஜ சாமி பெருமாள் கோவிலும் ஒன்று. திருப்பதி வெங்கடசலபதி கோவில் உட்பட அனைத்து கோவில்களும், 80 நாட்கள் இடைவேளைக்குப் பிறகு கடந்த 8-ஆம் தேதியன்று திறக்கப்பட்டன.

இந்நிலையில் தேவஸ்தான ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக தேவஸ்தான தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, தேவஸ்தான ஊழியரான சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு கடந்த புதனன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டதோடு, அவரும் உடனடியாக கரோனா சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது கோவில் இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளதோடு, கோவில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com