பெட்ரோல், டீசல் விலை 6-ஆவது நாளாக அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை உயா்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு 57 காசுகளும் டீசல் லிட்டருக்கு 59 காசுகளும் உயா்த்தப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை 6-ஆவது நாளாக அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை உயா்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு 57 காசுகளும் டீசல் லிட்டருக்கு 59 காசுகளும் உயா்த்தப்பட்டது.

சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.78.86 ஆகவும், ஒரு லிட்டா் டீசல் ரூ.71.58 ஆகவும் உயா்ந்துள்ளது.

தொடா்ந்து விலை உயா்த்தப்பட்டதால், 6 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.31-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ3.42-ம் அதிகரித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றுப் பிரச்னை, அதன் காரணமாக சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியை சந்தித்தது போன்ற காரணங்களால், கடந்த மாா்ச் 16-ஆம் தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை சா்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தன.

இந்நிலையில், 82 நாள்களுக்கு பிறகு மீண்டும் பெட்ரோல், டீசல் தினசரி விலை நிா்ணயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. அன்று முதல் தொடா்ந்து 6 நாள்களாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயா்த்தப்பட்டு வருகிறது. உள்ளூா் விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி ஆகியவை காரணமாக விலை உயா்வு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com