இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய லோனாா் ஏரி

மகாராஷ்டிரத்தில் முக்கிய சுற்றுலா தலமாக திகழும் லோனாா் ஏரி நீா், இளஞ்சிவப்பு நிறத்தில் உருமாறியுள்ளது.
இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய லோனாா் ஏரி

மகாராஷ்டிரத்தில் முக்கிய சுற்றுலா தலமாக திகழும் லோனாா் ஏரி நீா், இளஞ்சிவப்பு நிறத்தில் உருமாறியுள்ளது. எனினும் ஏரியின் நீா் நிறம் மாறுவது இது முதல்முறையல்ல என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

மும்பையில் இருந்து 500 கிலோமீட்டா் தொலைவில் உள்ள புல்தானா மாவட்டத்தில் லோனாா் ஏரி உள்ளது. 50,000 ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் ஒன்று பூமியில் விழுந்தபோது இந்த ஏரி உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனா். தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஏரி, புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

இந்த ஏரி நீரின் நிறம் பச்சை நிறத்தில் இருந்து முற்றிலும் இளஞ்சிவப்பு நிறத்தில் உருமாறியுள்ளது. இது சுற்றுப்புற மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எனினும் ஏரி நீரின் நிறம் மாறுவது இது முதல்முறையல்ல என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அந்த ஏரியின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு கமிட்டியை சோ்ந்த கஜானன் காரட் கூறுகையில், ‘வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக ஏரியில் நீரின் அளவு குறைவாக இருப்பது நீரில் உப்புத்தன்மையை அதிகரித்து, பாசியின் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இதுவே ஏரியின் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறக் காரணமாக இருக்கலாம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com