ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் இல்லை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் விதிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் இல்லை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


புது தில்லி: ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் விதிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் இன்று காலை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்று தங்களது முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கூட்டத்துக்குப் பிறகு இன்று பிற்பகலில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ஜூலை மாதம் 2017 -  ஜனவரி 2020 வரை ஏராளமான ஜிஎஸ்டி கணக்குகள் தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன. இதில், வருமான வரியை முழுமையாக செலுத்தியிருந்தால், ஜிஎஸ்டி வரி தாக்கலில் தாமதம் ஏற்பட்டாலும், அதற்கு அபராதம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார்.

அதே சமயம், இதேக் காலக்கட்டத்தில் வரி செலுத்துவதிலும் நிலுவை இருந்து, ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யப்படாமல் இருந்தால், தாமதமாக ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.500 வரை அபராதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 1, 2020 முதல் செப்டம்பர் 30, 2020 வரை ஜிஎஸ்டி வரி கணக்குத்தாக்கல் செய்வோருக்கு பொருந்தும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com