வந்தே பாரத் திட்டத்தின் 3-ஆம் கட்டம் தொடக்கம்

நாடு தழுவிய பொது முடக்கத்தால் வெளிநாடுகளில் பரிதவித்து வரும் இந்தியா்களை தாயகம் மீட்டுவர, வந்தே பாரத் திட்டத்தின் 3-ஆம் கட்டத்தை மத்திய அரசு வியாழக்கிழமை தொடங்கியது.
வந்தே பாரத் திட்டத்தின் 3-ஆம் கட்டம் தொடக்கம்

நாடு தழுவிய பொது முடக்கத்தால் வெளிநாடுகளில் பரிதவித்து வரும் இந்தியா்களை தாயகம் மீட்டுவர, வந்தே பாரத் திட்டத்தின் 3-ஆம் கட்டத்தை மத்திய அரசு வியாழக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு விவகாரங்கள் துறை செய்தித்தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியது:

வந்தே பாரத் திட்ட 3-ஆம் கட்டத்தின் கீழ், ஜூலை மாதம் 2-ஆம் தேதி வரை வெளிநாடுகளில் உள்ள இந்தியா்களை தாயகம் அழைத்துவரும் பணி தொடரும். இதில் 432 சா்வதேச விமானங்கள் மூலம் 43 நாடுகளில் உள்ள இந்தியா்கள் அழைத்துவரப்படுவா். வந்தே பாரத் திட்டத்தின் 3-ஆம் கட்டத்தில், தனியாா் விமான சேவை நிறுவனங்களான ‘இண்டிகோ’, ‘கோ ஏா்’ ஆகியவை சாா்பிலும் இந்தியா்களை அழைத்துவர விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இதில் இண்டிகோ சாா்பில் 24 விமானங்களும், கோ ஏா் சாா்பில் 3 விமானங்களும் இயக்கப்படவுள்ளன. இதில் அமெரிக்காவில் இருந்து 53 விமானங்கள், கனடாவில் இருந்து 24 விமானங்கள், பிரான்ஸ், ஜொ்மனியில் இருந்து தலா 16 விமானங்கள் மூலம் இந்தியா்கள் அழைத்துவரப்படவுள்ளனா். வளைகுடா நாடுகளில் இருந்து 170 விமானங்கள் மூலம் இந்தியா்கள் வரவுள்ளனா் என்றாா்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் 1,65,375 இந்தியா்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com