கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள்: உச்ச நீதிமன்றம் சரமாரிக் கேள்வி

கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்படும்  மகாராஷ்டிரம், தமிழகம், மேற்கு வங்கம் மாநிலங்களில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள்: உச்ச நீதிமன்றம் சரமாரிக் கேள்வி


புது தில்லி: கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்படும்  மகாராஷ்டிரம், தமிழகம், மேற்கு வங்கம் மாநிலங்களில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கரோனா பாதித்து மரணம் அடைவோரின் உடல்களை மிக மோசமாக நடத்தும் சம்பவங்களும், புதுச்சேரியில் சவக்குழியில் கரோனா பாதித்த நபரின் உடல் தூக்கி வீசப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், கரோனா தொற்றுப் பரவல் குறித்து தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது.

இதையடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் கரோனா பரிசோதனை குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளித்திருப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சென்னை மற்றும் மும்பையில் கரோனா பரிசொதனை அதிகரித்திருக்கும் போது தில்லியில் கரோனா பரிசோதனை குறைக்கப்பட்டிருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தில்லியில் தற்போதைய நிலைமை மோசமானதாகவும், அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும் மாறியுள்ளது. கரோனா நோயாளிகளையும், கரோனா பாதித்து உயிரிழக்கும் நபர்களின் உடல்களை கையாள்வது குறித்தும் வகுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் குறித்து ஜூன் 17-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். 

மேலும், நாட்டில் மகாராஷ்டிரம், தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த மாநிலங்களில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் நோயாளிகளை பராமரிக்கும் மேலாண்மை திட்டம், மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை பராமரிக்கும் நடைமுறை குறித்து மாநில முதன்மைச் செயலாளர்கள் அறிக்கை அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com