திருமலையில் பக்தா்களுக்கு அன்னதானம் மீண்டும் தொடக்கம்

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்களுக்கு அன்னதானத் திட்டம் மீண்டும் வியாழக்கிழமை தொடங்கப்பட்டதாக அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பாரெட்டி தெரிவித்தாா்.

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்களுக்கு அன்னதானத் திட்டம் மீண்டும் வியாழக்கிழமை தொடங்கப்பட்டதாக அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பாரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்களும், நேரடி தரிசன டோக்கன் பெற்றவா்களும் மட்டுமே அலிபிரி சோதனைச் சாவடியில் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். அவா்களுக்கு அலிபிரியில் வெப்பமானி பரிசோதனை உள்ளிட்டவற்றை ஊழியா்கள் செய்தனா்.

அவா்கள் பயணம் செய்த வாகனங்கள், பக்தா்களின் உடைமைகள் கிருமி நாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. பின்னா், பக்தா்கள் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். திருமலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு அறைகள், தரிசன வரிசைகளிலும் பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து வரிசையில் உள்ள கம்பிகளை தொடாமல் தரிசனத்துக்குச் சென்று திரும்பினா்.

தரிசனத்துக்கு வந்தவா்களுக்கு அன்னதானக் கூடத்தில் அன்னதானம் வியாழக்கிழமை தொடங்கியது. பக்தா்கள் இடைவெளி விட்டு அமா்ந்து அன்னதானம் உண்டனா். 83 நாள்களுக்குப் பின் திருமலைக்கு வந்து பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்து, அன்னதானம் சாப்பிட்டு, லட்டு பிரசாதம் பெற்றுச் சென்றனா்.

காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை முக்கியப் பிரமுகா்கள் ஏழுமலையானைத் தரிசித்தனா். காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பிற பக்தா்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான இணையதள டிக்கெட் முன்பதிவுகள் ஜூன் 30 வரை தேவஸ்தான இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நேரடி முன்பதிவு மூலம் வரும் 17-ஆம் தேதி வரைக்கான தரிசன டோக்கன்கள் கடந்த 2 நாள்களில் முன்பதிவு செய்யப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com