நக்ஸல்களுடன் தொடா்பு: சத்தீஸ்கரில் காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா் பணியிடைநீக்கம்

சத்தீஸ்கா் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸல்களுக்கு வெடிபொருள்களை அனுப்பி வைப்பதற்கு உடந்தையாக செயல்பட்டு வந்ததாக,

சத்தீஸ்கா் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸல்களுக்கு வெடிபொருள்களை அனுப்பி வைப்பதற்கு உடந்தையாக செயல்பட்டு வந்ததாக, காவல் உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து பஸ்தா் சரக காவல் துறை ஐ.ஜி. சுந்தர்ராஜ் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

நக்ஸல்களுக்கு ஆயுதங்கள் கொண்டு சென்ற 4 பேரை கடந்த வாரம் காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து பல ரக துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்களிடம் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சுக்மா மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் ஜாதவ் ஆனந்த், தலைமைக் காவலா் சுபாஷ் சிங் ஆகிய இருவருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரும் கடந்த 8-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பிறகு 10-ஆம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக, முழுமையாக விசாரணை நடத்துவதற்காக, கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளா் சித்தாா்த் திவாரி தலைமையில் 9 போ் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

காவல் துறையைச் சோ்ந்த ஒன்றிரண்டு பேரின் குற்றச் செயல்களால் ஒட்டுமொத்த காவல் துறையின் செயல்பாடுகளில் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com