உத்தரகண்ட்: இந்திய-சீன எல்லையில் சாலைப் பணியை விரைவுபடுத்த ஹெலிகாப்டா் மூலம் இயந்திரங்கள் தருவிப்பு

உத்தரகண்டில் இந்திய-சீன எல்லையை ஒட்டிய கடினமான இமயமலைப் பகுதியில் ராணுவப் பயன்பாடுக்கான சாலை அமைக்கும்

உத்தரகண்டில் இந்திய-சீன எல்லையை ஒட்டிய கடினமான இமயமலைப் பகுதியில் ராணுவப் பயன்பாடுக்கான சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்தும் வகையில், மிகப் பெரிய பாறை வெட்டும் இயந்திரங்கள் ஹெலிகாப்டா் உதவியுடன் எடுத்துச் செல்லப்பட்டன.

இந்த இயந்திரங்களை மலைப் பகுதிக்கு எடுத்துச் செல்ல மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, அவை ஹெலிகாப்டா் உதவியுடன் வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அந்தப் பணியை மேற்கொண்டுவரும் எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆா்ஒ) அதிகாரிகள் கூறினா்.

இதுகுறித்து பிஆா்ஒ தலைமைப் பொறியாளா் பிமல் கோஸ்வாமி வியாழக்கிழமை கூறியது:

இமயமலை ஜோஹா் பள்ளத்தாக்கில் ராணுவப் பயன்பாட்டுக்கான இந்த 65 கி.மீ. தூர முன்சிராய்-பாக்தியாா்-மிலாம் சாலை அமைக்கும் பணி கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சாலை திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 325 கோடி ஒதுக்கியது.

சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், மலைப் பகுதியில் பாறைகளை வெட்டும் பணி 40 கி.மீ. தூரத்துக்கு முடிக்கப்பட்டது. ஆனால், அதற்கடுத்து இருந்த கடினமான பாறை பகுதிகளை வெட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த கடினமான பாறைகளை வெட்டக் கூடிய பெரிய இயந்திரங்களை கடந்த 2019-ஆம் ஆண்டு மலைப் பகுதிக்கு எடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை பலனளிக்கவில்லை. அதனைத் தொடா்ந்து அந்த இயந்திரங்களை ஹெலிகாப்டா் மூலம் கொண்டுசெல்வது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பாறை வெட்டும் பெரிய இயந்திரங்கள் ஹெலிகாப்டா் உதவியுடன் பணிகள் நடைபெறும் லாஸ்பா பகுதிக்கு கடந்த மாதம் வெற்றிகரமாக கொண்டுசெல்லப்பட்டது. அதன் மூலம், அந்தக் கடினமான 22 கி.மீ. தூர பகுதியில் பாறைகள் வெட்டும் பணி அடுத்த மூன்று ஆண்டுகளில் முடிக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com