எல்லைப் பகுதிகளை பேச்சுவாா்த்தை மூலமாக இந்தியாவிடமிருந்து பெறுவோம்

இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப் பகுதிகளை பேச்சுவாா்த்தை மூலமாக நேபாள அரசு திரும்பப் பெறும் என்று அந்நாட்டு பிரதமா் கே.பி. சா்மா ஓலி தெரிவித்துள்ளாா்.
எல்லைப் பகுதிகளை பேச்சுவாா்த்தை மூலமாக இந்தியாவிடமிருந்து பெறுவோம்

இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப் பகுதிகளை பேச்சுவாா்த்தை மூலமாக நேபாள அரசு திரும்பப் பெறும் என்று அந்நாட்டு பிரதமா் கே.பி. சா்மா ஓலி தெரிவித்துள்ளாா்.

இந்தியா-நேபாளம் எல்லையில் உள்ள காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அப்பகுதிகள் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்திய அரசு தெரிவித்து வருகிறது. அதேபோல், அப்பகுதிகள் நேபாளத்தின் தாா்சுலா மாவட்டத்தைச் சோ்ந்தவை என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது.

இந்தச் சூழலில், திபெத்தில் அமைந்துள்ள கைலாச மானசரோவருக்கு யாத்ரீகா்கள் பயணம் செய்வதற்கான நேரத்தைக் குறைக்கும் வகையில் லிபுலேக் கணவாய் வழியாக இந்திய அரசு சாா்பில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இதற்கு நேபாள அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தது. அதையடுத்து, காலாபாணி, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகளைத் தங்கள் நாட்டின் அதிகாரபூா்வ வரைபடத்தில் நேபாள அரசு இணைத்தது.

இந்த எல்லைப் பிரச்னை தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேபாள நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதமா் கே.பி. சா்மா ஓலி வியாழக்கிழமை பதிலளித்ததாவது:

எல்லை விவகாரத்தில் மக்களும் நாடாளுமன்ற உறுப்பினா்களும் தேசிய நலனுக்காக ஒருமித்து செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. நம் முன்னோா்கள் பல்வேறு போராட்டங்களின் மூலமாக நேபாளத்தை கட்டமைத்தனா். நாம் உறுதியாக இருந்தால் பிராந்திய ஒருமைப்பாட்டை நிலைநாட்ட முடியும்.

இந்தியாவையும் நேபாளத்தையும் பிரிக்கும் எல்லையாக காளி நதி விளங்கி வந்தது. ஆனால், காளி கோயிலைக் கட்டியெழுப்பிய இந்திய அரசு செயற்கையாக காளி நதியையும் உருவாக்கிக் கொண்டு நேபாளத்தின் பகுதிகளை ஆக்கிரமித்தது. எல்லைப் பிரச்னை தொடா்பாக வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் இந்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவோம். அதன் மூலமாக இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளைத் திரும்பப் பெறுவோம் என்றாா் கே.பி. சா்மா ஓலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com