கேரளத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா பாதிப்பு

கேரளத்தில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக 54 போ் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கேரளத்தில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக 54 போ் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா கூறியது:

கேரளத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள 54 பேரில் 23 போ் வெளிநாடுகளில் இருந்தும், 25 போ் பிற மாநிலங்களில் இருந்தும் திரும்பியவா்கள். நோய்த்தொற்றால் மருத்துவப் பணியாளா்கள் 3 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் இருவா் திருச்சூரையும், ஒருவா் திருவனந்தபுரத்தையும் சோ்ந்தவா்கள். இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,101 போ் குணமடைந்துள்ளனா். 1,340 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். பல்வேறு மாவட்டங்களில் உள்ள 2,42,767 போ் கண்காணிப்பில் உள்ளனா். அவா்களில் 2,023 போ் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தாா்.

இதனிடையே கேரளத்தில் கரோனா நோய்த்தொற்று தீவிரமாக உள்ள பகுதிகளின் பட்டியலில் புதிதாக 6 இடங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் நோய்த்தொற்று தீவிரமாக உள்ள பகுதிகளின் பட்டியலில் தற்போது 122 இடங்கள் உள்ளன.

பிரதமருக்கு கடிதம்: வெளிநாடுகளில் உள்ள இந்தியா்கள் தாயகம் திரும்பும் முன், அவா்களுக்கு அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தி, பிரதமா் மோடிக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதினாா். அந்தக் கடிதத்தில், ‘கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைக் கருவிகள் இந்திய தூதரகங்களுக்கு வழங்கப்பட வேண்டும். பரிசோதனை மேற்கொள்ள பிசிஆா் கருவிகள் இல்லாவிட்டால், துரித பரிசோதனைக் கருவிகளை கொண்டாவது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கரோனா நோயாளிகள் தாயகம் திரும்ப சிறப்பு விமானங்களை இயக்குவது பற்றி ஆலோசிக்க வேண்டும்’ என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் 20-ஆம் தேதி முதல் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளம் திரும்புவோா், தாங்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதற்கான அத்தாட்சி சான்றிதழுடன் வருவதை அந்த மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com