2020ல் 94 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்; அடுத்த இலக்கு வடக்கு காஷ்மீர் - ஐ.ஜி. விஜய் குமார்

2020 ஆம் ஆண்டில் இதுவரை 94 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீரின் காவல் ஆய்வாளர் விஜய் குமார் தெரிவித்தார்.
2020ல் 94 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்; அடுத்த இலக்கு வடக்கு காஷ்மீர் - ஐ.ஜி. விஜய் குமார்

2020 ஆம் ஆண்டில் இதுவரை 94 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீரின் காவல் ஆய்வாளர் விஜய் குமார் தெரிவித்தார்.

தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் செவ்வாய்கிழமை உள்ளூர்  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

பின்னர் இதுகுறித்து காவல் ஆய்வாளர் விஜய் குமார் கூறுகையில், 

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும்படி, பொதுமக்களிடம் கேட்டுள்ளோம். இது வெளிப்படையான தாக்குதல். எதுவும் மறைக்கப்படவில்லை. இதனால் சேதம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், 'ஐ.எஸ்.ஜே.கே தளபதி ஆதில் அஹ்மத் வானி, லஷ்கர்-இ-தொய்பா ஷாஹீன் அஹ்மத் தோகர் ஆகியோர் மே 25 அன்று குல்காமில் கொல்லப்பட்டனர்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி பர்வைஸ் அஹ்மத் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது  அமைப்பின் ஷாகிர் அகமது மே 30 அன்று வான்போரா குல்காமில் கொல்லப்பட்டனர். 

அதேபோன்று ஜெய்ஷ்-இ-முகமது தளபதி ஆகிப் ரம்ஜான் வானி அவந்திப்போரா ஜெய்ஷ்-இ-முகமது தளபதி முகமது மக்பூல் சோபன் ஆகியோர் ஜூன் 2 ஆம் தேதி அவந்திபோராவில் கொல்லப்பட்டனர். 

இவ்வாறாக 2020ம் ஆண்டில் மட்டும் இதுவரை 94 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில் பவுஜி பாய் தவிர, பயங்கரவாதிகள் அனைவரும் ஜம்மு-காஷ்மீரில் வசிப்பவர்கள், அவர்களில் பெரும்பாலோர் ஷோபியன், குல்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

எங்களது அடுத்த இலக்கு வடக்கு காஷ்மீரில் இருக்கும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com