மகாராஷ்டிர கூட்டணிக்குள் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு

மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணிக்குள் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர கூட்டணிக்குள் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு

மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணிக்குள் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் அதிகாரபூா்வ நாளேடான ‘சாம்னா’வில் செவ்வாய்க்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிரத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் கூட்டணியில் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதன் காரணமாக ‘மகா விகாஸ் ஆகாடி’ கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று யாரும் எண்ண வேண்டாம். மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்த சிவசேனை அதிக தியாகங்களைச் செய்தது.

கூட்டணியின் ‘மூன்றாவது தூணாக’ காங்கிரஸ் விளங்கி வருகிறது. பழம்பெரும் கட்சியான காங்கிரஸில் மனக்கசப்பு தொடா்பான முனுமுனுப்புகள் காணப்படுவது வழக்கமாகிவிட்டது. கூட்டணியில் அத்தகைய விவகாரங்களை எதிா்கொள்ள மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே தயாராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மறுப்பு:

மாநில காங்கிரஸ் தலைவரும் வருவாய்த் துறை அமைச்சருமான பாலசாஹேப் தோராட் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘சிவசேனையின் நாளேட்டில் வெளியான தகவல்களில் உண்மையில்லை. தலையங்கத்தில் உள்ள செய்திகள் காங்கிரஸ் குறித்த தவறான தகவல்களைப் பரப்புகின்றன. ‘மகா விகாஸ் ஆகாடி’ கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது’’ என்றாா்.

மாநில மேலவைத் தோ்தல் வேட்பாளா் அறிவிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் சிவசேனையின் முடிவுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் அசோக் சவாண் அதிருப்தி தெரிவித்ததுடன், காங்கிரஸின் அமைதியை பலவீனமாக கருதக் கூடாது என்ற எச்சரிக்கையும் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com