கடந்த 24 மணி நேரத்தில் 1.65 லட்சம் கரோனா பரிசோதனை: ஐ.சி.எம்.ஆர்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,65,412 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1.65 லட்சம் கரோனா பரிசோதனை: ஐ.சி.எம்.ஆர்


புது தில்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,65,412 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் ஆய்வகங்களால் நடத்தப்பட்ட அதிக எண்ணிக்கையிலான சோதனைகள் இதுவாகும். கரோனா பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரை 62,49,668 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

இதுவரை, நாடு முழுவதும் உள்ள மொத்தம் 953 ஆய்வகங்களில், 699 அரசு ஆய்வகங்கள் மற்றும் 254 தனியார் ஆய்வகங்கள் உள்படத் தொற்றுநோய்க்கான பரிசோதனையை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,68,557 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 12,274 ஆகவும் உயர்ந்துள்ளது. அதே சமயம், 1,61,440 பேர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும், 1,94,843 பேர் நோயிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com