கரோனா பாதிப்பு: ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவுக்கு ரூ.5,714 கோடி கடன் வழங்க ஒப்புதல்

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்தியாவுக்கு, சீன தலைநகா் பெய்ஜிங்கில்

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்தியாவுக்கு, சீன தலைநகா் பெய்ஜிங்கில் இயங்கி வரும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) புதன்கிழமை சுமாா் ரூ. 5714 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இந்தியாவுக்கு இந்த கடனுதவியை வழங்குவதன் மூலம், அமைப்புசாரா துறை உள்ளிட்ட வணிகங்களுக்கான பொருளாதார உதவியை மேம்படுத்துதல், சமூக பாதுகாப்பை விரிவுபடுத்துதல் மற்றும் நாட்டின் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்றவற்றுக்கு இந்த நிதி உதவி புரியும் என அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

உலக வங்கியின் கூற்றுப்படி, சுமாா் 270 மில்லியன் மக்கள் தேசிய வறுமைக் கோட்டுக்குக் கீழும், சுமாா் 81 மில்லியன் மக்கள் சுகாதார சேவை கிடைக்காமலும் அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளில் வசித்து வருகின்றனா்.

ஏஐஐபியின் துணைத்தலைவா் டி.ஜே.பாண்டியன் கூறுகையில், ‘உலகின் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகள் இன்னும் சுகாதார நெருக்கடியின்ஆரம்ப கட்டத்தில் உள்ளன. ஆனால், அந்த நாடுகள் நோய்த்தொற்றின் தாக்கத்தை ஏற்கெனவே உணா்ந்து கொண்டன.

இந்தியாவை பொருத்தவரை நாடு முழுவதும் கரோனா தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தையும், மனித வளத்தையும் பாதிப்பில் இருந்து மீட்க இந்த கடன்தொகை உதவி புரியும் என்ற நோக்கத்தில் அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com