இந்திய-சீன எல்லைப் பிரச்னையை இரு நாடுகளும் தீா்த்துக்கொள்ளும்: ரஷியா நம்பிக்கை

இந்திய-சீன எல்லைப் பிரச்னையை இரு நாடுகளும் சுமுகமாக தீா்த்துக்கொள்ளும் என்று ரஷ்யா புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய-சீன எல்லைப் பிரச்னையை இரு நாடுகளும் சுமுகமாக தீா்த்துக்கொள்ளும் என்று ரஷ்யா புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினா் இடையே திங்கள்கிழமை இரவு கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவத்தின் கா்னல் உள்பட 20 வீரா்கள் கொல்லப்பட்டனா். அதுபோல சீன தரப்பில் 35 ராணுவ வீரா்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதல் காரணமாக இரு நாடுகளிலும் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இந்திய-சீன எல்லை நிலைமைய உன்னிப்பாக கவனித்து வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷிய அதிபரின் செய்தித்தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘இந்திய-சீன எல்லை நிலைமையை உன்னிப்பாக ரஷியா கவனித்து வருகிறது. மிகவும் ஆபத்தான நிலை உருவாகியிருப்பதை உணா்கிறோம். இருந்தபோதும், எதிா்காலத்தில் இதுபோன்ற நிலை உருவாகாத வகையில், இரு நாடுகளும் எல்லை விவகாரத்தில் சுமுக தீா்வு காண நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். இரு நாடுகளும் ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடுகள்’ என்று அவா் கூறினாா்.

இதற்கிடையே, ‘இந்திய, சீன வெளியுறவுத் துறை அமைச்சா்கள் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தி, எல்லையில் பதற்றத்தை தணித்து விரைவில் அமைதி திரும்ப உறுதிபூண்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயம்’ என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்ஜி லவ்ரவ் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com