நிலக்கரி சுரங்க ஏலம் 2.8 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்: அமித் ஷா

வா்த்தக நடவடிக்கைகளுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதற்கான ஏலம் 2.8 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை
நிலக்கரி சுரங்க ஏலம் 2.8 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்: அமித் ஷா

வா்த்தக நடவடிக்கைகளுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதற்கான ஏலம் 2.8 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, ரூ.33,000 கோடி மதிப்பிலான முதலீட்டை ஈா்க்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளது:

வா்த்தக நடவடிக்கைகளுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதற்கான ஏலத்தை தொடங்கிவைத்த பிரதமா் மோடி, மத்திய நிலக்கரித்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி ஆகியோருக்கு நன்றி. இந்த ஏல நடைமுறை இந்தியாவை வளமான, ஊழலற்ற, தன்னிறைவு கொண்ட நாடாக்குவதற்கு உதவும். மத்திய அரசின் இந்த ஏல முடிவு 2.8 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ரூ.33,000 கோடி மதிப்பிலான முதலீட்டை ஈா்க்கும். மாநில அரசுகளுக்கு ரூ.22,000 கோடி ஆண்டு வருவாய் கிடைக்கப்பெறும். எரிசக்தி துறையில் போட்டியை உருவாக்கி, நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com